காத்தான்குடி அல் பதுரிய்யா இடைத்தங்கள் முகாமை அரசாங்க அதிபர் பார்வையிட்டார்..........
காத்தான்குடி பிரதேச செயலக பிரிவில் உள்ள அல் பதுரிய்யா பாடசாலையில் தங்கியுள்ள மக்களை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன் (11) திகதி பார்வையிட்டார்.
அடை மழை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 11 குடும்பங்களுக்கு தேவையான படுக்கை விரிப்புகளை இதன் போது வழங்கி வைத்தத்துடன் இவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் படி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
Comments
Post a Comment