களுவங்கேணி கடலில் மூழ்கிக் காணாமல்போன சிறுவன் சடலமாக மீட்பு............
தைப்பொங்கல் தினத்தன்று மட்டக்களப்பு களுவங்கேணி கடற்கரையில் குளிக்கச் சென்றபோது, நீரில் மூழ்கிக் காணாமல்போன 17 வயதுடைய சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
விநாயகபுரம் சித்தாண்டி-1 சேர்ந்த சிறுவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். களுவங்கேணி வோட் வாடி கடற்கரையில் சடலம் கரையொதுங்கிய நிலையிலேயே மீட்கப்பட்டது.
திடீர் மரண விசாரணை அதிகாரி எஸ்.எம்.நசீர் குறித்த இடத்துக்கு வருகை தந்து சடலத்தைப் பார்வையிட்டதுடன், மேலதிக சட்டவைத்திய பரிசோதனைக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
Comments
Post a Comment