மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் வருடாந்த ஒன்று கூடல்......
மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் வருடாந்த ஒன்று கூடலானது மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் தலைவர் மாமாங்கராஜா தலைமையில் மட்டக்களப்பு தனியார் விடுதியில் (21) திகதி இடம் பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக மாவட்ட சிவில் சமூக அமைப்பின் போசகரும், மட்டக்களப்பு மறை மாவட்டம் ஆயருமான ஜோசப் பொன்னையா ஆண்டகை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன் ஆகிய இருவரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.
இதன் போது கடந்த 2023ம் ஆண்டு காலப்பகுதியில் சிவில் சமூக அமைப்பினரினால் மேற்கொண்ட செயற்திட்டங்கள் தொடர்பாக தெளிவூட்டப்பட்டதுடன், 1984ம் ஆண்டு முதல் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பானது தமது சேவையை மேற்கொண்டு வருவதாக இதன் போது கருத்து தெரிவித்த அமைப்பின் தலைவர் எஸ்.மாமாங்க ராஜா தெரிவித்திருந்தார்.
இவ் அமைப்பினர் மாவட்டத்தின் அபிவிருத்தி செயற்திட்டத்திலும், அனர்த்தங்கள் ஏற்படும் போதும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஶ்ரீகாந்த், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் எதிரிமான, கெனல் தம்மிக்க, உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எல்.எம்.ஜமில், துறைசார் நிபுணர்கள், உயர் அதிகாரிகள், சிவில் சமூக அமைப்பினர் என பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment