வெள்ள பாதிக்கப்பு மக்களுக்கு நிவாரண உதவிகளை துரிதப்படுத்துமாறு அரசாங்க அதிபர் பணிப்பு.....
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வந்த அடை மழை காரணமாக வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளை துரிதப்படுத்துமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன் பணிப்புரை விடுத்துள்ளார்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன் நேற்று (04) திகதி நேரில் சென்று பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்டவர்களின் தேவைப்பாடுகளையும் கேட்டறிந்து கொண்டார்.
இதன் போது ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட சித்தாண்டி மற்றும் கிரான் ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் வெள்ள நீரினால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
Comments
Post a Comment