மட்டக்களப்பு எகெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன...........
ஈஸ்டர் குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், வறுமைக்கோட்டின் கீழ் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்ப மாணவர்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
சாக் பெண்கள் அமைப்பின் அனுசரணையில் மட்டக்களப்பு எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் எகெட் கரித்தாஸ் நிறுவன இயக்குனர் அருட்பணி ஜேசுதாசன் அடிகளார் தலைமையில் உலர் உணர்வு பொதிகள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் மட்டக்களப்பு மறை மாவட்ட குரு முதல்வர் ஜோர்ச் ஜீவராஜ், சாக் பெண்கள் அமைப்பின் பெண் பிரதிநிதிகள், எகெட் கரித்தாஸ் நிறுவன உத்தியோகத்தர்கள், பயனாளிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment