மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு நடைபெற்றது..............
மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களை ஒன்றிணைக்கும், ஒன்றுகூடல் நிகழ்வு மட்டக்களப்பில் இன்று நடைபெற்றது.
அகம் மனித வள நிலையம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. மட்டக்களப்பு –திருகோணமலை மாவட்டங்களுக்கான மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் இஸ்ஸடீன், மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு ஊடக அமையத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார், கிழக்கு மாகாண ஊடகவியாளர் ஒன்றியத்தின் தலைவர் எல்.தேவதிரன் உட்பட ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
ஊடகவியலளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களுக்கான தேவைப்பாடுகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அகம் மனித வள நிலையத்தின் பிரதி இணைப்பாளர் அ.மதன், திட்ட முகாமையாளர் நாகேஸ்வரன் மிரேகா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment