சிவானந்தா தேசிய பாடசாலைக்கு பழைய மாணவர் சங்கத்தால் கதிரைகள் வழங்கி வைப்பு.................
மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கத்தால் சிவானந்தா பாடசாலை ஒன்றுகூடல் நிகழ்வுக்கு தேவைக்கென கதிரைகளைக் கையளிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (14) சிவானந்தா தேசிய பாடசாலை கணினி செயற்பாட்டறையில் இடம்பெற்றது.
சிவானந்தா பழைய மாணவர் சங்கத் தலைவரும், மண்முனை வடக்குப் பிரதேச செயலாளருமான வி.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலை மாணவர் சங்கத்தினரால் பாடசாலை நிர்வாகத்திடம் 250 கதிரைகள் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
இதன் போது பாடசாலை அதிபர் எஸ்.தயாபரன், பிரதி அதிபர் த.குலேந்திரகுமார், உதவி அதிபர் எஸ்.மணிவண்ணன், பழைய மாணவர் சங்க செயலாளரும், கணக்காளருமான பி.குணராஜா மற்றும் சங்கப் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் விஷேட அம்சமாக பாடசாலை நிர்வாகத்துக்கும், பழைய மாணவர் சங்கத்துக்குமிடையே புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்தானமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment