குருக்கள்மடத்தில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.......
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
களுவாஞ்சிகுடியிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச்சென்ற முச்சக்கர வண்டியும் மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச்சென்ற லொறியும் மோதியே விபத்துச் சம்பவித்துள்ளது.
முச்சக்கர வண்டியின் சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலமும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. லொறியின் சாரதி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.
Comments
Post a Comment