மட்டக்களப்பில் உள்ளூர் உற்பத்தி தொழில் நிறுவனமான நாகா பசுமை நிலையம் திறந்து வைப்பு.............
மட்டக்களப்பில் உள்ளூர் உற்பத்தி தொழில் நிறுவனமான நாகா பசுமை நிலையம் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரனால் மட்டக்களப்பு பொது சந்தை கட்ட தொகுதியில் (24)ம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
நாகா பசுமை நிலையத்தின் ஸ்தாபகர் கோகிலாதேவி ரஞ்சித்குமார் தலைமையில் இந் நிகழ்வுகள் இடம் பெற்றன.
மாவட்டத்தில் உள்ளூர் தொழில் முயற்ச்சியாளர்களை ஊக்குவித்து நாட்டின் பொருளாதாரத்தில் பங்கு கொள்ள செய்வதற்காக பல வேலைத்திட்டங்கள் மாவட்டத்தில் முன்னேடுக்கப்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பெறப்படும் விளை பொருட்களை மூலப் பொருட்களாக கொண்டு இந் நிறுவனம் தனது உற்பத்தி பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றது.
வெளிநாட்டு சந்தை வாய்ப்பை நோக்காக கொண்டு பெறுமதி சேர் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது இந் நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.
மேலும் உணவுக்கு தேவையான வாசனைப் பொருட்கள் இங்கு உற்பத்தி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதே செயலக உதவிப் பிரதேச செயலாளர் சியாஹீல் ஹக், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உயர் அதிகாரிகள், அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் மற்றும் வங்கிகளின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment