திருகோணமலை சம்பூரில் வீர தமிழனின் வீர விளையாட்டு..............

திருகோணமலை சம்பூரில் வீர தமிழனின் வீர விளையாட்டு..............

இந்திய தமிழ் நாட்டில் சிறப்பாக நடைபெறும் ஏறு தழுவுதல் நிகழ்வு இலங்கையில் ஒரே ஒரு இடமான கிழக்கு மாகாணத்தில் வரலாற்று முக்கியத்துவமான தமிழர்களின் வீரம் விழைந்த ஆதி குடி சம்பூரில் நடக்க இருக்ககிறது.

இதற்காக தமிழ் நாட்டில் பல காலமாக ஏறு தழுவுதல் நடத்தும் மிக அனுபவமுள்ளவர்கள் இந்தியாவில் இருந்து வரவழைக்கபட்டு கிழக்கு மாகான ஆளுனர் செந்தில் தொண்டமான் அவர்கள் களத்தில் நிற்கும் போதே இரவு பகல் பார்காமல் அதற்கான ஆயத்தங்கள் துரித கதியில் நடை பெறுகிறது.

தமிழ் நாட்டுக்கு சென்று பார்காதவர்கள் இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடாதீர்கள். கண்டிப்பாக சென்று பாருங்கள் பங்கு பெறுங்கள். மிகவும் அற்புதமாக தமிழ் நாட்டில் நடை பெறுவதை போன்று பயிற்றுவிக்க பட்டவர்களால் ஒழுங்கமைக்கப்படுகிறது என்பது குறிப்பிட தக்கது. எதிர்காலங்களில் இதே போன்று நடைபெறுவதற்காக இளைஞர்களுக்கும் கற்று கொடுக்க படுகிறது.  

இந்த விழா நடை பெறுவதற்காக பாழடைந்த வீதிகள் புதிபிக்கபட்டமையும் பொது மைதானத்தில் சில முன்னேற்ற வேலைகள் செய்யபட்டமையும் சம்பூர் கிராமத்துக்கு ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

இலங்கையில் என்றுமே நடைபெறாத வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு சம்பூர் மண்ணில் நடை பெற இருக்கிறது. யாரால் செய்யபடுகிறது என்பது முக்கியமல்ல  என்ன செய்யபடுகிறது என்பதே முக்கியம்.

மக்களுக்கு நல்லவை எங்கு நடந்தாலும் அதற்க்கு எல்லோரும் கை கொடுக்போம். ஏறு தழுவுதலில் உங்கள் காளைகளை இணைத்தும் நீங்களும் பங்கு கொண்டும் சிறப்பித்து பரிசுகளையும் பெற்று கொள்ளுங்கள்.




Comments