ஜப்பானில் அடுத்தடுத்து பலமுறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது........

 ஜப்பானில் அடுத்தடுத்து பலமுறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது........

ஜப்பானில் அடுத்தடுத்து பலமுறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மக்கள் அச்சத்தில் அலறியடித்து வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இலங்கை நேரப்படி மதியம் 12.40 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகியுள்ளது. குறித்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமியின் முதல் அலைகள் ஜப்பானில் தாக்க தொடங்கியது. ஐந்து மீற்றர் நீளமான சுனாமி அலைகள் குறித்து எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இஸ்கிகவா பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான பகுதிகளிற்கு செல்லுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். பூகம்பத்தை தொடர்ந்து இஸ்கிகவா பகுதியில் பல வீடுகள் தரைமட்டமாகியுள்ளன மின்கம்பங்கள் சரிந்து விழுந்துள்ளன. அத்துடன் டோக்கியோவிற்கும் பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிக்கும்இடையில் புகையிரத போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சக்திவாய்ந்த நிலநடுக்கங்களைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட உயர்மட்ட சுனாமி எச்சரிக்கையை கைவிட்டது ஜப்பான் அரசு. இருப்பினும் பள்ளமான பகுதிகளில் உள்ள மக்களை உயரமான பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடலோரப்பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளுக்குத்திரும்ப வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Comments