மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தால், நெற் செய்கைக்கு பாரிய பாதிப்பு ஏட்பட்டுள்ளது........

 மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தால், நெற் செய்கைக்கு பாரிய பாதிப்பு ஏட்பட்டுள்ளது........

 மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் மழையுடனான காலநிலையினால் ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாக பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் விவசாயிகளுக்கு பாரிய நஸ்டங்கள் ஏற்பட்டுள்ளதுடன் பயிர்களுக்கும் நோய்த்தாக்கமும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வில்லுக்குளத்தினை அண்டிய இடங்களில் சுமார் இரண்டாயிரம் ஏக்கர் விவசாய செய்கைகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.

தற்போது நெற்குடலை பருவமாக காணப்படும் நிலையில் நோய்த்தாக்கங்களும் அதிகரித்துள்ளதனால் எதிர்காலத்தில் அறுவடைகள் எதுவும் கிடைக்காத நிலைமையே ஏற்படும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

வெள்ள அனர்த்தம் ஏற்பட்ட போது சேதங்களை அதிகாரிகள் மதிப்பிடவேண்டும் எனவும் வெள்ளம் வடிந்த பின்னர் விவசாய நிலங்களில் சேதவிபரங்களை செய்வதினால் விவசாயிகள் பாதிக்க்ப்படும் நிலையேற்படும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Comments