மட்டு இந்துக்கல்லூரியில் மாபெரும் சிரமதானம்.....
மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் தை-28 (ஞாயிறு) அன்று மாபெரும் சிரமதானம் நடைபெறவுள்ளதாக மட்டக்களப்பு இந்துக்கல்லூரின் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் மு.சதீஸ்குமார் தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டு கல்லூரியின் 78வது ஆண்டு நிகழ்வை முன்னிட்டும், பாடசாலை எதிர்வரும் மாசி-02ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதையும் கருத்தில் கொண்டு முதல் தடவையாக இப்பாரிய சிரமதான பணியை ஏற்பாடு செய்துள்ளதாகவும், இதற்காக புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மாணவர்களும், இங்குள்ள எமது அன்பு உள்ளங்களும் ஒன்றினைவதாக உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
எனவே சகலரும் ஒன்றினைந்து இச்சிரமதான பணியில் கைகோர்க்குமாறு அன்புடன் அழைப்பதாக மட்டக்களப்பு இந்துக்கல்லூரின் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் மு.சதீஸ்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments
Post a Comment