மட்டக்களப்பு கோவில்குளத்தில் விஷேட போதைப்பொருள் பரிசோதனை.....
நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் "யுத்திய மெஹெயும" விஷேட போதைப்பொருள் சுற்றி வளைப்பு இன்று புதன்கிழமை (10) மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதியிலுள்ள கோவில்குளத்தில் முன்னெடுக்கப்பட்டது.
இவ்விஷேட சுற்றிவளைப்பினை காத்தான்குடி, மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலைப் பொலிசாரும் அவர்களோடு இணைந்து விஷேட அதிரடிப்படையினர் மற்றும் போக்குவரத்துப் பொலிசாரும் மேற்கொண்டனர்.
இதன் போது அவ்வீதி வழியாக வருகை தந்த இலங்கைப் போக்குவரத்துச் சபை பேருந்து மற்றும் தனியார் பேருந்துகளில் பயணித்தோர் கீழே இறக்கப்பட்டு, ஆண்கள் பொலிசாராலும், பெண்கள் பெண் பொலிசாராலும் அவர்களது பைகள் பரிசோதிக்கப்பட்டன. அத்தோடு வாகனங்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டன.
இந்நடவடிக்கையில் விஷேட மோப்ப நாய்களும் கொண்டு வரப்பட்டு சோதனை இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. இச்சோதனை நடவடிக்கைகள் காலை 10 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணி வரை இடம்பெற்றது.
Comments
Post a Comment