பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவில் சமுர்த்தி ரன்விமன வீடுகள் திறந்துவைக்கப்பு............

பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவில்  சமுர்த்தி ரன்விமன வீடுகள் திறந்துவைக்கப்பு............

2023ம் ஆண்டு விசேட வீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சமுர்த்தி ரன்விமன வீடுகள் (04) அன்று மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஷ் அவர்களினால் திறந்து வைக்கப்ட்டது.
மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவின் கொக்கட்டிச்சோலை சமுர்த்தி வலயத்தில் முனைக்காடு கிழக்கு, முதலைக்குடா மேற்கு ஆகிய பிரிவுகளில் இவ்வீடுகள் திறந்து வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் சமுர்த்தி முகாமைத்துவப்பணிப்பாளர் சி.தியாகராஜா. கொக்கட்டிச்சோலை சமுர்த்தி வங்கி வலய முகாமையாளர் M.புவிராஜ் மற்றும் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் சி.ருசகுமார் முதலைக்குடா பிரிவு உத்தியோகத்தர் பொ.சோதிமலர் மற்றும் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு உறுப்பினர்களின் பங்கேற்புடன் முல்லைவாசன் கேதினி, சண்முகம் இராசலிங்கம் ஆகியவர்களின் வீடுகள் பிரதேச செயலாளரின் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்காக சமுர்த்தி பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டது.


Comments