மட்டக்களப்பில் வெள்ள பாதிப்பை நேரில் சென்று பார்வையிட்ட அரசாங்க அதிபர்...........
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே முரளிதரன் (10) திகதி நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மீராகேனி பிரதேசத்திற்கு சென்று வெள்ளி நீரினால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டதுடன் தேங்கியுள்ள வெள்ள நீரினை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
மீராக்கேனி பாலம் புனரமைக்கப்படாமல் இருப்தனால் வெள்ள நீர் செல்வதற்கு தடையாக உள்ளதை அவதானித்ததுடன் பாலத்தின் கட்டுமான பணியினை நிறைவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்வதற்கான ஆலோசனையினையும் இதன்போது அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார்.
இவ் விஜயத்தின் போது ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் நிஹாரா மௌயூத் உள்ளிட்ட அரச அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment