உணவுப் பாதுகாப்பற்ற குடும்பங்களுக்கு, உலருணவுப் பொதிகள் விநியோகம்...............
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துடன் இணைந்து விசேட செயற்றிட்டத்தின் கீழ் உணவு பாதுகாப்பற்ற குடும்பங்களுக்கான உதவி வழங்கும் நிகழ்வு, மட்டக்களப்பு சுவாமி விவேகானந்தர் முதியோர் இல்லத்தில் இடம்பெற்றது.
சுவாமி விவேகானந்தர் முதியோர் இல்லம் மற்றும் மட்டக்களப்பு இந்து இளைஞன் மன்றம் என்பன ஒன்றிணைந்து மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களின் வாழ்வாதாரத்திற்கான உதவி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இச் செயற்றிட்டத்திற்கு அமைய மண்முனை வடக்கு பிரதேச செயலாளரின் சிபாரிசுக்கு இணங்க, உணவு பாதுகாப்பற்ற குடும்பங்களுக்கான உதவி வழங்கும் திட்டங்கள் முன்னெடுத்தப்படுகிறது.
கல்லடி பிரதேச கிராம சேவையாக பிரிவுகளில் வறுமை கோட்டிற்குட்பட்ட நிலையில் வாழ்கின்ற குடும்பங்களில் உணவு பாதுகாப்பட்ட குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான உலர் உணவு பொதிகள் வழங்கும் இரண்டாம் கட்ட நிகழ்வு இன்று இடம் பெற்றது.
மட்டக்களப்பு சுவாமி விவேகானந்தர் முதியோர் இல்ல தலைவர் சாரங்கபாணி அருள்மொழி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அதிதியாக மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் சந்திரா பிரணவ ஜோதி, அபிவிருத்தி உத்தியோகதார் மீரா முருகதாஸ், சுவாமி விவேகானந்தர் முதியோர் இல்ல பொருளாளர் அருளானந்தம், பொதுச் செயலாளர் முருகதாஸ், மன்றத்தின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பயனாளிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment