மட்டக்களப்பிலிருந்து மாகோ நோக்கிப் பயணித்த புகையிரதம் விபத்தில் ................
மட்டக்களப்பிலிருந்து மாகோ சந்தி நோக்கிப் பயணித்த சரக்கு புகையிரதத்தோடு, வெலிக்கந்தையில் பிக்கப் ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் பிக்கப் வாகனத்தின் சாரதி படுகாயமடைந்த நிலையில், பொலனறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்துக்குள்ளான வாகனம் அகற்றப்பட்ட பின்னர், சில மணி நேர தாமதத்தோடு, மாகோ சந்தி நோக்கிய பயணத்தைப் புகையிரதம் ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment