வாழைச்சேனையில், தோனாவொன்றில், திடீரென இறந்து மிதந்த மீன்கள்............

வாழைச்சேனையில், தோனாவொன்றில், திடீரென இறந்து மிதந்த மீன்கள்............

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேச செயலளர் பிரிவில் உள்ள கட்டப்பாடு கும்புறுமூலையில் உள்ள தோனாவில் காணப்பட்ட மீன்கள் திடீரென இறந்து மிதப்பதாக பிரதேச மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

நேற்று மாலை முதல் மீன்கள் இறந்து மிதப்பதாக கூறப்படுகிறது. இரசாயன பாதார்த்தம் ஏதும் கலந்து, இவ் அனர்த்தம் ஏற்பட்டிருக்கலாம் என மீனவர்கள் ஐயம் வெளியிட்டுள்ளனர்.

வாழைச்சேனை பொதுசுகாதார பரிசோதகர்கள், கோறளைப்பற்று பிரதேச செயலக அனர்த்த முகாமை உத்தியோகத்தர்கள், கடல் தொழில் அபிவிருத்தி உத்தியோகத்தர், மற்றும் கல்குடா பொலிசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், நீரின் மாதிரி ஆய்வுக்காக கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


Comments