மண்முனை பற்று பிரதேச செயலகப் பிரிவிலுள்ள தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு காணி உரிமம் வழங்கும் நிகழ்வு..............
மண்முனை பற்று பிரதேச செயலகப் பிரிவிலுள்ள தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு காணி உரிமம் வழங்கும் நிகழ்வு..............
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 20 இலட்சம் காணித்துண்டுகளில் வசிக்கும் உரிமமற்ற குடியிருப்பாளர்களுக்கு, காணி உரிமம் வழங்கப்படவுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 28 பேருக்கு முதற்கட்டமாக உரிமம் வழங்கப்பட்டது. காணி உரிமம் வழங்கும் நிகழ்வு ஆரையம்பதி பிரதேச செயலக பதில் பிரதேச செயலாளர் ரோஜினி விவேகானந்த ராஜா தலைமையில் இடம்பெற்றது.
பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கலந்துகொண்டார். முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் மற்றும் முன்னாள் பிரதேச செயலாளர் நமசிவாயம் சத்யானந்தி, பிரதேச செயலக காணி பிரிவு உயர் அதிகாரிகள் பயனாளிகளும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment