மட்டக்களப்பு றோட்டரி கழகம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் கண் சிகிச்சை முகாமை நடாத்தியது..............

 மட்டக்களப்பு றோட்டரி கழகம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் கண் சிகிச்சை முகாமை நடாத்தியது..............

அவுஸ்திரேலியா கண் சிகிச்சை நிபுணர்களின் அணுசரணையுடன், மட்டக்களப்பு றோட்டரி கழகம் இலவச கண் சிகிச்சை முகாமினை  வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் நடாத்தியது.

வாகரை, கிரான், கல்குடா, ஓட்டமாவடி போன்ற இடங்களில் உள்ள மாணவர்கள் முதல் அரச உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் கண் பரிசோதனையை மேற்கொண்டு இலவச மூக்கு கண்ணாடியை பெற்றுச் சென்றனர்.

சிலர் கண் பரிசோதனை பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்கள் ஊடாக கண் நோயாளர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

24 களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் இச் சிகிச்கை முகாமை நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு றோட்டரி கழகத்தலைவர் தெரிவித்தார்

Comments