மட்டு இந்துக்கல்லூரியின் உயர்வுக்கு கைகொடுக்கும் விழுதுகள்.........

 மட்டு இந்துக்கல்லூரியின் உயர்வுக்கு கைகொடுக்கும் விழுதுகள்.........

மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஒரு கிளையாகிய விழுதுகள் குழுவினர் பாடசாலை அபிவிருத்தியில் துள்ளியமாக தங்கள் சேவையை வழங்கி வருகின்றனர்.

 இதன் அடிப்படையில் எந்தவொரு பாடசாலையிலும் செய்யப்படாத ஒரு வேலைத்திட்டத்தை இவ்விழுதுகள் குழுவினர் ஆரம்பித்துள்ளனர். பாவனைக்கு உதவாதது என புறந்தள்ளி வைக்கப்பட்ட மாணவர்களின் கதிரை மற்றும் மேசைகளை புதிதாக திருத்தியமைத்து கொடுப்பதற்கான முன் முயற்சியை மேற் கொண்டுள்ளனர்.

இதற்காக 100 கதிரைகள் மற்றும் 100 மேசைகளை முதல் கட்டமாக தயார் செய்து வழங்குவதற்கான பணியையும் தொடங்கியுள்ளனர். இப்பணிகள் எதிர்வரும் மாசி 05ந் திகதிக்கு முன்பதாக முடித்து உத்தியோக பூர்வமாக அதிபரிடம் கையளிக்கப்படும் என பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் இரா.சிவநாதன் தெரிவித்துள்ளார்.





Comments