இலங்கையில் இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்.............
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இலங்கையில் அவர் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார்.
கொழும்பு லங்கா மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். கொழும்பில் இசை நிகழ்ச்சிக்காக வருகை தந்துள்ள இளையராஜா, மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார்.
இளையராஜாவின் இசையில் பாரதி திரைப்படத்தில் மயில் போலப் பொண்ணு ஒன்னு என்ற இவர் பாடிய பாடல் இவருக்குச் சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருது கிடைத்தது.
Comments
Post a Comment