கிழக்கின் முதல் குழந்தை நல மருத்துவப்பேராசிரியரானார் வைத்திய நிபுணர் விஜி திருக்குமார்.............

 கிழக்கின் முதல் குழந்தை நல மருத்துவப்பேராசிரியரானார் வைத்திய நிபுணர் விஜி திருக்குமார்.............

கிழக்கின் முதல் குழந்தை நல மருத்துவப்பேராசிரியராக கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட சிரேஸ்ட விரிவுரையாளரும்,   மட்/போதனா வைத்தியசாலையின்  விசேட குழந்தை நல வைத்திய நிபுணருமான டாக்டர் விஜி திருக்குமார் தெரிவாகியுள்ளார்.

காரைதீவைச் சேர்ந்த வைத்திய கலாநிதி விஜயகுமாரி திருக்குமார் கொழும்பு பல்கலைக்கழகம் லண்டன் றோயல் உயர் கல்லூரி என்பவற்றில் உயர் பட்டங்கள் பெற்றவர்.

MBBS DCH MD FRCPCH எனப் பல மருத்துவ சேவைகள் பட்டங்கள் பல பெற்ற இவர் குழந்தை நலன் தொடர்பாக பல  மருத்துவ துறை கட்டுரைகளை எழுதி வருகிறார். வரலாற்றில் இவர் தான் கிழக்கில் முதலாவது குழந்தை நல மருத்துவப்பேராசிரியர் என்ற பெருமையை பெறுகிறார்.

இவரது துணைவர் வைத்திய கலாநிதி மார்க்கண்டு திருக்குமார் யாழ்.உரும்பிராயைச் சேர்ந்த மகப்பேற்று நிபுணராவார். அவரும் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவத் துறை பேராசிரியராவார்.






Comments