மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தால், விளையாட்டுத் துறையில் சாதித்தோருக்கு கௌரவம்...........
2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில் சர்வதேச மற்றும் தேசிய நிலையில் சாதித்த விளையாட்டு வீரர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு, மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்றது. சாதனையாளர்களைப் பயிற்றுவித்த பயிற்றுவிப்பாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
மண்முனை வடக்கு பிரதேச செயலக விளையாட்டு பிரிவின் ஏற்பாட்டில், பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எம்.ஆர்.சியாகவுள் ஹக், மாவட்ட விளையாட்டு துறை உத்தியோகத்தர் ஈஸ்வரன், மண்முனை வடக்கு பிரதி திட்டமிடல் பணிப்பாளர் சந்திரா பிரணவஜோதி, செரி நிறுவன இலங்கை நாட்டுக்கான பணிப்பாளர் தர்ஷன் மற்றும் விளையாட்டு துறை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்
47வது தேசியமட்ட விளையாட்டு போட்டிகளில் பங்கு பற்றி சாதனை படைத்த வீர வீராங்கனைகள், 22ஆவது ஆசிய மூத்தோருக்கான மெய் வல்லுநர் விளையாட்டு போட்டியில் பங்கு வெற்றி சாதனை படைத்த மூத்த விளையாட்டு வீரர் மற்றும் பாக்கு நீரினை கடந்து சாதனை படைத்த வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள், விளையாட்டு துறை உத்தியோகத்தர்கள் என பலரும் பாராட்டி விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
Comments
Post a Comment