சந்திவெளி சித்தி விநாயகர் வித்தியாலய பரிசளிப்பு விழா................
மட்டக்களப்பு, சந்திவெளி சித்திவிநாயகர் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா பாடசாலை அதிபர் சி.சுரேஸ்குமார் தலைமையில் இடம்பெற்றது.
பாடசாலையும், சமூகமும் இணைந்து நடாத்திய இவ்விழாவில் பிரதம அதிதியாக வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாளேந்திரன் அவர்களும், கௌரவ அதிதிகளாக வலயக் கல்வி பணிப்பாளர்களான தி.ரவி, த.அனந்தரூபன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் சமய குருமார்கள், கல்வி அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், பெற்றார்கள் என பலர் கலந்து கொண்டு மாணவர்களை கௌரவித்தனர்.
10 வருடங்களுக்கு பிறகு நடைபெறும் இப்பரிசளிப்பு விழாவில் சகல துறைகளிலும் பிரகாசித்த 220ற்கும் அதிகமான மாணவர்களும் ஆசிரியர்களும் கௌரவித்து பாராட்டப்பட்டதுடன், பல்கலைக்கழக அனுமதி பெற்றோர் 08 பேர் சாதாரண பரீட்சையில் அதிகமான உயர் பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள், தரம் 05 புலமை பரிசில் பரீட்சையில் வெட்டுபுள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்கள், விளையாட்டு, அழகியல் உள்ளிட்ட பல்வேறு இணைப்பாடவிதான செயற்பாடுகளில் மாகாண, தேசிய மட்ட சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் இதற்காக தங்களை அர்ப்பணித்த அதிபர் ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
Comments
Post a Comment