டிப்ளோமா கற்கைகளை நிறைவு செய்த மாணவர்களுக்கு கௌரவிப்பு............

 டிப்ளோமா கற்கைகளை நிறைவு செய்த மாணவர்களுக்கு கௌரவிப்பு............

ஐடிஎம் நிறுவனத்தில் டிப்ளோமா கற்கைகளை நிறைவு செய்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஐடிஎம் நிறுவனத்தின் பணிப்பாளர் ரி.சசிகுமார் தலைமையில் மட்டக்களப்பு தனியார் விடுதியில் (28)ம் திகதி இடம் பெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் கலந்து சிறப்பித்துள்ளார்.
ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் டிப்ளோமா கற்றை நெறியை பூர்த்தி செய்த மாணவ மாணவிகளுக்கு இதன் போது அதிதிகளினால் சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் மாவட்டத்தில் மாணவர்களின் கற்றல் நடவடிக்கையினை மேம்படுத்த புதிய கற்கை நெறிகளையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்றார்.
இந் நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் கே.ரீ.சுந்தரேசன், மட்டக்களப்பு வலய கல்வி அலுவலக திட்டமிடல் பிரதி கல்விப் பணிப்பாளர் சி.சுபாகரன், மாணவர்களின் பெற்றார்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.





Comments