சிவாநந்த பழைய மாணவர் சங்கத்தின் நிவாரண பணி வழங்கப்பட்டது...........
பிரித்தானிய சௌத்தென்டை தளமாக கொண்டு இயங்கும் முத்தமிழ் மன்றத்தின் நிதி அனுசரணையில் மட்டக்களப்பு சிவாநந்த பழைய மாணவர் சங்கத்தின் நடைமுறைப்படுத்தலின் கீழ் அண்மையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பணி (29) அன்று அமிர்தகழி மற்றும் சின்ன ஊரணியில் உள்ள 40 குடும்பங்களுக்கு வழங்குவதற்காக மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு வழங்கப்பட்டது.
இவ்நிவாரண பொருட்களை உரிய கிராம மக்களுக்கு மண்முனை வடக்கு பிரதேச செயலாளரும், சிவாநந்த பழைய மாணவர் சங்க தலைவருமான வ.வாசுதேவன் அவர்களும், உதவி பிரதேச செயலாளர் ஷியாகுள் ஹக், கிராம சேவை உத்தியோகத்தர்கள், அனர்த்த முகாமை சேவை உத்தியோகத்தர்கள், சிவாநந்த பழைய மாணவர்கள் மற்றும் சிவாநந்த பட்டமுன் சங்க அங்கத்தவர்களும் கலந்து கொண்டு வழங்கி வைத்தனர்.
இவ் வேளையில் இவற்றுக்கு நிதி அனுசரணை வழங்கிய முத்தமிழ் மன்றம் சௌத்தென்ட்- UK க்கு சிவாநந்த பழைய மாணவர் சங்கத்தினர் தமது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.
Comments
Post a Comment