மட்டக்களப்பு ஆரையம்பதி கிராமத்தினுள் புகுந்த முதலை...............
மட்டக்களப்பு ஆரையம்பதி சிகரம் கிராமத்தினுள் நான்கரை அடி நீளமான முதலை உட்புகுந்ததால், கிராம மக்கள் அச்சமடைந்தனர்.
முதலையை அவதானித்த கிராம வாசிகள் காத்தான்குடி பொலிஸாருக்கும், வனஜீவராசிகள் திணைக்களத்திற்கும் தகவல் வழங்கினர்.
காத்தான்குடி பொலிசாரின் மேற்பார்வையில், வனஜீவராசிகள் திணைக்கள பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஸ்தலத்திற்கு வருகை தந்து, முதலையை பாதுகாப்பாக மீட்டுச் சென்றனர்.
Comments
Post a Comment