சுகாதார ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு:மட்டக்களப்பில் சிவில் உடையில் பணியாற்றும் ஊழியர்கள்................
சுகாதார ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு:மட்டக்களப்பில் சிவில் உடையில் பணியாற்றும் ஊழியர்கள்................
வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார ஊழியர்களில் சிலர் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிவில் உடையில் பணியாற்றுவதை அவதானிக்க முடிந்தது.
ஒன்பது சுகாதார தொழிற்சங்கங்கள் புதன்கிழமை (10) முதல் நடத்தி முன்னெடுத்து வருகின்ற தொழிற்சங்க போராட்டம் காரணமாக பல்வேறு சுகாதாரத் தரப்பினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இருந்த போதிலும் இன்றைய தினம் பல சுகாதார துறை சார்ந்த ஊழியர்கள் சிவில் உடையில் மக்களுக்காக பணியாற்றுவதை காணக் கூடியதாய் இருந்தது. மக்களுக்காக நாம் சிவில் உடையில் பணி செய்வதாக குறித்த சுகாதார ஊழியர்கள் தெரிவித்தனர்.
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் வியாழக்கிழமை (11) பெருமளவிலான நோயாளர்கள் சிகிச்சை பெற வந்திருந்த நிலையில் சுகாதார ஊழியர்கள் சிலர் இவ்வாறு கடமையில் ஈடுபட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
மாவட்டத்தில் பொதுச் சுகாதார பரிசோதகர் உட்பட சுகாதாரத் துறை சார்ந்த ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் தொடர்ந்தும் இரண்டாவது நாளாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment