கோறளைப்பற்று தெற்கு புதிய பிரதேச செயலாளராக கே.சித்திரவேல் பொறுப்பேற்று கொண்டார்.

கோறளைப்பற்று தெற்கு  புதிய பிரதேச செயலாளராக கே.சித்திரவேல் பொறுப்பேற்று கொண்டார்.

  கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக பிரிவின் புதிய பிரதேச  செயலாளர் கே.சித்திரவேல் அவர்களை  வரவேற்கும் உத்தியோகபூர்வமான நிகழ்வு அசாதாரண காலநிலை மாற்றம் (மழை வெள்ளம்) காரணமாக கோரகல்லிமடு பிரதேச செயலாளர் விடுதியில் 2024.01.10 புதன்கிழமை இடம்பெற்றது.

 இந்நிகழ்வில்  உதவி பிரதேச செயலாளர்  எஸ்.யோகராஜா, பிரதி திட்டமிடல் பணியாளர் எஸ்.சிவநேசராஜா, கணக்காளர் எஸ்.சுந்தரலிங்கம், நிர்வாக உத்தியோகத்தர் கே.கருணாநிதி மற்றும் பிரதேச  செயலக  உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.





Comments