சிறுவர்கள் தொடர்பான முடிவுகளின் போது: சிறுவர்களின் பங்களிப்பை வலுப்படுத்துதல் தொடர்பில் பயிற்சி செயலமர்வு..........

 சிறுவர்கள் தொடர்பான முடிவுகளின் போது: சிறுவர்களின் பங்களிப்பை வலுப்படுத்துதல் தொடர்பில் பயிற்சி செயலமர்வு..........

சிறுவர் உரிமைகள் தொடர்பான அறிவினை மேம்படுத்தல் மற்றும் முடிவுகள் எடுக்கும் செயல்பாடுகளில் சிறுவர்களின் பங்களிப்பினை வலுப்படுத்தல் எனும் பயிற்சி செயலமர்வு இன்று (04) மட்டக்களப்பில் இடம்பெற்றது

மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனமான லிப்ட் நிறுவனம், மாவட்டத்தில் நலிவடைந்த நிலையில் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் வாழ்வாதாரம் மாணவர்களின் கல்வி, சுகாதாரம் போன்ற சமூக அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

அதன் ஒரு செயற்றிட்டமாக சிறுவர் உரிமைகள் தொடர்பான அறிவினை மேம்படுத்தும் மற்றும் முடிவுகள் எடுக்கும் செயல்பாடுகளில் சிறுவர்களின் பங்களிப்பினை வலுப்படுத்தும் வகையில், கிராம மட்ட சிறுவர்களை மையப்படுத்தி செயற்பட்டு வரும் அமைப்புகளை ஒன்றிணைத்து செயற்படும் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட ஐந்து அமைப்புகளின் உறுப்பினர்களுக்கான பயிற்சி செயலமர்வு நடாத்தப்பட்டது.

யுனிசெப் நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் லிப்ட் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜானு முரளிதரன் தலைமையில் இடம்பெற்ற பயிற்சி செயலமர்வில், வளவாளர்களாக லிப்ட் நிறுவன ஸ்தாபகரும், ஆலோசகருமான முரளிதரன், செரி நிறுவனத்தின் இலங்கை நாட்டுக்கான பணிப்பாளர் எபனேசர் தர்ஷன் மற்றும் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் மயில்வாகனம் புவிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இத்திட்டத்தின் மூலம் மட்டக்களப்பில் இயங்கி வரும் ஐந்து தன்னார்வத் தொண்டர் அமைப்புகளிற்கு சிறு அளவிலான நிதி உதவிகளும் லிப்ட் நிறுவனத்தினால் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments