போரதீவுப்பற்று பிரதேச இலக்கிய விழா................
போரதீவுப்பற்று பிரதேச செயலகமும் போரதீவுப்பற்று கலாசார பேரவையும் இணைந்து நடாத்தும் பிரதேச இலக்கிய விழா நிகழ்வானது இம்முறை 31 ஆம் திகதி வெல்லாவெளி கலாசார மத்திய நிலையத்தில் போரதீவுப்பற்று கலாசார பேரவைத் தலைவரும் பிரதேச செயலாளருமான சோ.ரங்கநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
புத்தகக் கண்காட்சிக் கூடம் ஒன்று பிரதேச செயலாளரினால் திறந்து வைக்கப்பட்டதுடன் கலை நிகழ்வுகள் பலவற்றுடன் அறநெறிப்பாடசாலை மாணவ, மாணவிகளால் நீதி நூல் ஒப்புவித்தல் மற்றும் வில்லுப் பாட்டு நிகழ்வு என்பனவும் இம்முறை இலக்கிய விழாவினை அலங்கரித்திருந்தன.
இறுதியாக பிரதேச இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment