மட்டக்களப்பு 93 நண்பர்களால் தைத்திருநாளை முன்னிட்டு கிரான் பிரதேசத்தில் உலர் உணவு வழங்கி வைப்பு....
அன்றாடம் தம் வாழ்வாதாரத்தை இழந்து வாழும் மக்கள் தம் தைத்திருநாளை சந்தோசமாக கொண்டாட வேண்டும் எனும் சிந்தனையில் தம்மால் முடிந்த உதவிகளை மட்டக்களப்பில் 93ல் உயர்கல்வி கற்ற மாணவர்கள் ஒன்றினைந்து செய்துள்ளனர். புனித மிக்கல் கல்லூரி, சிவானந்தா பாடசாலை, மெதடிஸ்த மத்திய கல்லூரியில் 1993ல் உயர்தரம் கல்வி பயின்ற மாணவர்களை ஒன்றினைத்து '93 Batch - Batticaloa' எனும் பெயரில் பல சேவைகளை மட்டக்களப்பில் செய்து வருகின்றனர்.
இதன் அடிப்படையில் 14 அன்று கிரான் பிரதேச செயலத்திற்குட்பட்ட குடும்பிமலை கிராமத்தில் அன்றாட தொழில் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு கிரான் பிரதேச செயலாளர் திரு.சித்திரவேல் அவர்களின் தலைமையில் வழங்கப்பட்டது. இதற்கான நிதியுதவியை சிங்கப்பூரில் வசிக்கும் சீ.யோகராசா என்பவரால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment