மட்டக்களப்பு மாவட்டத்தில் 84 ஆயிரம் ஏக்கர் வயற்காணிகள் பாதிப்பு............
மட்டக்களப்பு மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராகவிருந்த 84 ஆயிரம் ஏக்கர் வயற்காணிகள் நீரில் மூழ்கியமையினால் 35 ஆயிரம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட உதவி கமநல சேவை ஆணையாளர் எஸ்.ஜெகநாதன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை ஒரு இலட்சத்து 85 ஆயிரம் ஏக்கரில் நெற் செய்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. நிலவிய மழையுடன் கூடிய காலநிலையில் 84 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான வயற்காணிகள் நீரில் மூழ்கியமையினால் நெற்செய்கை பாதிக்கப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்டத்தின் உதவி கமநல சேவை ஆணையாளர் எஸ்.ஜெகநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெல்லாவெளி, கொக்கட்டிச்சோலை, செங்கலடி, வாகரை உள்ளிட்ட பிரதேச செயலக பிரிவுகளில் கூடுதலான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. நெல் அறுவடைக்கு தயாரான நிலையிலேயே இவ்வாறு பாதிப்பு ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
Comments
Post a Comment