மட்டு இந்துவின் 78 ஆண்டை முன்னிட்டு இரத்ததான நிகழ்வு மாசி-02ல்.......

 மட்டு இந்துவின் 78 ஆண்டை முன்னிட்டு இரத்ததான நிகழ்வு மாசி-02ல்.......

மட்டக்களப்பு இந்துக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட 78வது வருடத்தை கொண்டாடும் முகமாக மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் பழைய சங்கத்தின் ஏற்பாட்டில், பாடசாலை தொடங்கப்பட்ட தினமாகிய மாசி-02ல் இரத்ததான நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் இரா.சிவநாதன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு இந்துக்கல்லூரியானது 1946ம் ஆண்டு மாசி மாதம் இரண்டாம் திகதி வல்லிபுரம் நல்லையா அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையாகும். இப்பாடசாலை 2024ம் ஆண்டு தன் 78 ஆண்டை பூர்த்தி செய்யவுள்ளது எனவே,  இதனை கருத்தில் கொண்டு பல்வேறு வேலைத்திட்டங்களை பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பாடசாலை சமூகம் இணைந்து  செயற்படுத்தவுள்ளது, இதன் ஆரம்ப கட்டமாக இந்த இரத்ததான நிகழ்வை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையுடன் இனைந்து மட்டக்களப்பு இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் 2024 மாசி 02ம் திகதி காலை தொடக்கம் இந்துக்கல்லூரி நல்லையா மண்டபத்தில் நடாத்தவுள்ளது.

எனவே நாமும் பார்வையாளராக இல்லாமல் பங்காளிகளாக மாறி எம்மால் முடிந்த, தானத்தில் சிறந்த இரத்த தானத்தில் இனைந்த கொள்ளுமாறு மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் மு.சதீஸ்குமார் அன்புடன் கேட்டுக் கொள்கின்றார்.


Comments