வங்காள தேசத்தின் நோபல் பரிசு வென்றவருக்கு 6 மாத சிறை தண்டனை.......
2022 ஜனவரி மாத காலகட்டத்தில் சுமார் 9.5 மில்லியன் மக்கள் கிராமின் வங்கியால் பயனடைந்தனர். தற்போது 83 வயதாகும் முகமது யூனுஸ், வங்காள தேசத்தில் இலாப நோக்கமற்ற (not-for-profit) சேவை உணர்வோடு கிராமின் தொலைதொடர்பு நிறுவனத்தை நடத்தி வந்தார்.
இந்நிலையில், தனது நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கான நல நிதியில் சட்ட விதிகளை பின்பற்றாமல் முறைகேடு செய்ததாக யூனுஸ் மற்றும் 3 பணியாளர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. அந்நாட்டின் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. 2023 ஒகஸ்ட் மாதம் உலகளாவிய பிரபலங்கள் 170 பேர் பேராசிரியர் யூனுஸ் மீதான சட்டரீதியான தாக்குதலை நிறுத்துமாறு வங்காள தேச பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தன.
விசாரணை நிறைவுற்ற நிலையில் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், பேராசிரியர் முகமது யூனுஸ் மற்றும் 3 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்து 6 மாத சிறை தண்டனையும் வழங்கியுள்ளது. 'எந்த விதிமுறைகளுக்கும் பொருந்தாத தீர்ப்பு இது. நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை' என பேராசிரியர் யூனுஸ் இத்தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்தார்.
Comments
Post a Comment