இன்று கல்லடியில் விபத்து; 4 பேருக்கு காயம்..............
மட்டக்களப்பில் இருந்து காத்தான்குடி நோக்கி அதி வேகமாக பயணித்துக் கொண்டிருந்த மகிழூர்ந்து ஒன்று கல்லடி சிவானந்தா தேசியபாடசாலைக்கு முன்பாக வீதியை கடப்பதற்காக தரித்து நின்ற முச்சக்கர வண்டியை மோதித் தள்ளி விபத்துக்குள்ளாது.
இதில் முச்சக்கர வண்டிக்குள் அமர்ந்திருந்த 4 பேர் காயமடைந்துள்ளனர். அதி வேகமாக பயணித்த கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையே இவ் விபத்து சம்பவிக்க காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
Comments
Post a Comment