மட்டக்களப்பில் போதை பொருள் கடத்தல் காரர்கள் 3 பேர் கைது.........
மட்டக்களப்பு தலைமைய பொலிசார் விசேட அதிரடிப்படையின் இணைந்து யுக்தி நடவடிக்கையின் கீழ் போதை பொருளை கடத்துபவர்களை தேடி நகருக்குள் உள் நுழையும் பஸ் வண்டிகள் மற்றும் வாகனங்களை ஊறணி மட்டு மாநகர சபை வரவேற்று கோபுரத்துக்கு அருகில் வீதியில் நிறுத்தி சோதனையிடும் நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு ஆரம்பித்து விடிய விடிய இடம்பெற்றுள்ளதாகவும் சந்தேகத்தில் 3 பேரை கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
யுக்தி நடவடிக்கை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜெயரத்தினா தலைமையில் மட்டு தலைமையக பொலிஸ்நிலைய பொலிசார், மாவட்ட போக்குவரத்து பிரிவு பொலிசார், கொக்குவில் பொலிஸ் நிலைய பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இன்று அதிகாலை 2 மணிக்கு போதை பொருளை கடத்துபவர்களை தேடி கொழும்பு வீதியிலுள்ள, மட்டு மாநகர வரவேற்று கோபுரத்துக்கு அருகில் நகருக்குள் உள் நுழையும் தனியார் சொகுசு பஸ்வண்டிகள், இலங்கை போக்குவரத்து பஸ்வண்டிகள், மற்றும் மோட்டார் சைக்கிள், கனரக வாகனங்கள் முச்சக்கரவண்டி உட்பட அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்த சோதனை நடவடிக்கையின் போது பஸ்வண்டிகளில் இருந்து அனைத்து பயணிகளையும் கீழ் இறக்கி அவர்களையும் அவர்களது உடமைகள் அனைத்தையும் தீவிரமாக சோதனையிடும் நடவடிக்கை காலை 6 மணிவரை மேற்கொண்ட நிலையில் சந்தேகத்துக்கு இடமாக பிரயாணித்த 3 பேரை கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்களை விசாரணையின் பின்னர் விடுவிக்கப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
Comments
Post a Comment