அஸ்-ஸபா முன்பள்ளியின் 23 வது மாணவர் வெளியேற்று விழாவும், கெளரவிப்பு நிகழ்வும்.......

 அஸ்-ஸபா முன்பள்ளியின் 23 வது மாணவர் வெளியேற்று விழாவும், கெளரவிப்பு நிகழ்வும்.......

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவின் பதுரியா நகர் அஸ்-ஸபா முன்பள்ளியின் 23வது மாணவர் வெளியேற்று விழாவும், கெளரவிப்பு நிகழ்வும் நேற்று (04) மாலை மீராவோடை கலாசார மண்டபத்தில் இடம் பெற்றது.
பதுரியா நகர் சன சமூக நிலையத்தின் தலைவர் எம்.பீ.முபாறக் (அதிபர்) தலைமையில் ஸ்ரீ லங்கா மீடியா போரத்தின் பணிப்பாளர் ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் அவர்களின் ஒருங்கிணைப்புடன் இடம் பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே. முரளிதரன் கலந்து சிறப்பித்தார்.


இந் நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.எம்.அல் அமீன், ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஏ.எம்.நெளபர், கல்குடா
அக்கீல் அவசர உதவிச்சேவை பிரிவின் தலைவர் எம்.ஏ.சீ.நியாஸ் மற்றும் ஓட்டமாவடி பிரதேச செயலக அதிகாரிகள், பிரதேசத்தின் முக்கிய பிரமுகர் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் புதிய மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே. முரளிதரன் அவர்களின் உயர்தரமான அரச பணி சிறப்புற தொடர வேண்டும் என வாழ்த்தி பாராட்டி அவரை வரவேற்று இப்பிரதேச மக்கள் சார்பில் பதுரியா சன சமூக நிலையம் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களினால் பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் விஷேடமாக ஸ்ரீ லங்கா மீடியா போரம் சார்பில் அதன் பணிப்பாளரும் ஊடகவியலாளருமான எம்.ரீ.எம் பாரிசினால் அரசாங்க அதிபருக்கான சிறப்பு நினைவுப் பரிசில் ஒன்று வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலுல் இம் முன்பள்ளியில் இருந்து பிரியாவிடைபெற்று 2024 புதிய ஆண்டில் தரம் ஒன்று கல்வியை தொடரவுள்ள அனைத்து மாணவர்களுக்கான நினைவுச் சின்னங்களை அரசாங்க அதிபர் வழங்கி பாராட்டினார்.
மாணவர்களின் கலை, கலாசார நிகழ்வுகளை மிகுந்த ஆர்வத்துடன் பார்வையிட்ட அரசாங்க அதிபர் குழந்தை பருவத்தில் அவர்களுடைய மேடை நிகழ்வுகள் முன்வைப்புக்கள் பற்றி பாராட்டி தனது உரையின் போது அவர்களின் எதிர்காலம் சிறக்க வாழ்த்தியதுடன், நிகழ்வின் ஏற்பாட்டாளர்களுக்கும் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.


Comments