கோறளைப்பற்று வாழைச்சேனை யில் 2024 ஆம் ஆண்டுக்கான முதல் நாள் கடமை நிகழ்வு............

 கோறளைப்பற்று வாழைச்சேனை யில் 2024 ஆம் ஆண்டுக்கான முதல் நாள் கடமை நிகழ்வு............

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் 2024 ஆம் ஆண்டுக்கான முதல் நாள் கடமை நிகழ்வானது பிரதேச செயலகத்தில் (01) காலை 8.30 மணியளவில் பிரதேச செயலாளர் ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் அமலினி கார்த்தீபன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.கங்காதரன், கணக்காளர் ஜே.ஜோர்ச், நிருவாக உத்தியோகத்தர் ஜெயக்குமார் புனிதநாயகி, மேலதிக மாவட்ட பதிவாளர் புனிவதி ஆனந்தன், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் கே.தேவமனோகரி மற்றும் அலுவலக உள்ளக, வெளிக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
2024 ஆம் ஆண்டின் முதல் நாளினை வரவேற்கும் முகமாக பால் பொங்கும் நிகழ்வுடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் பிரதேச செயலாளர் ஜெயானந்தி திருச்செல்வம் அவர்களினால் தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
மேலும் நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கான இரண்டு நிமிட மௌன அஞ்சலி நிகழ்த்தப்பட்டதுடன் இவ் ஆண்டிற்கான உறுதிமொழியும் எடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பிரதேச செயலாளர் ஜெயானந்தி திருச்செல்வம் அவர்கள் ‘’வலுவான எதிர்காலத்திற்கான தொடக்கவுரை’’ எனும் இவ்வருடத்தின் கருப்பொருளுக்கும், தற்போதைய சர்வதேச போக்குக்கும் அமைவாக புதிய பொருளாதாரச் செயன்முறையொன்றுக்கான அடிப்படையொன்றை தனது உரையின் மூலம் வெளிப்படுத்தினர்.
அத்தோடு 2024 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் சமர்பிக்கப்பட்டு முன்வைக்கப்படுகின்ற விடயங்களின் வாயிலாக மக்களுக்கான சேவையினை எவ்வாறு இலகுவானதாகவும், நேர்த்தியானதாகவும் வழங்கலாம் எனப் பலதரப்பட்ட விடயங்களை வெளிப்படுத்தினார்.
அலுவலக உத்தியோகத்தர்களின் சேவையினை ஊக்குவிக்கும் முகமாக 2023 ஆண்டில் பலதரப்பட்டவிடயங்களை கருத்திற்கொண்டு சிறந்த உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, பிரதேச செயலகத்தின் சிறுவர், பெண்கள் பிரிவினால் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு உதவும் முகமாக பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டது.
மேலும் அலுவலக உத்தியோகத்தர்களுக்கு பழமரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இறுதியாக, பிரதேச செயலக நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டினால் பாற்சோறும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Comments