2024 சர்வதேச மாற்றுத்திறனாளிகள் விழா.............
மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தின் சமூக சேவை பிரிவு ஏற்பாடு செய்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் விழா பிரதேச செயலாளர் ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் 130 மாற்று திறனாளிகளுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன் மற்றும் சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.சிவநாயகம், உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment