2024ம் ஆண்டின் அலுவலக கடமை செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு.......

 2024ம் ஆண்டின் அலுவலக கடமை செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு.......

"வலுவான எதிர்காலத்துக்கான தொடக்கவுரை" எனும் தொனிப்பொருளின் கீழ் மலர்ந்துள்ள 2024ம் ஆண்டின் அலுவலக செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வுகள் நேற்றைய தினம் (01) மு.ப 8.45 மணியளவில் பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் அவர்களினால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, அலுவலக உத்தியோகத்தர்களினால் தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன், மும்மத அனுஷ்டானங்கள் இடம்பெற்று இராணுவ வீரர்கள் உள்ளிட்ட நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த அனைவரையும் நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து அரச சேவை உறுதியுரையும் உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்பட்டதுடன், பிரதேச செயலாளர் அவர்களினால் தற்போதைய சவால்களை வெற்றி கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அரச கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டங்கள் பற்றியும் அந்த குறிக்கொள்களை அடைவதற்கு அரச ஊழியர்களின் பங்களிப்பு பற்றியும் உரை நிகழ்த்தப்பட்டது.
மேலும் பொருளாதார நெருக்கடியை வெற்றி கொள்வதற்கான குறுகிய மற்றும் நீண்ட கால திட்டங்களின் கீழ் வறுமை ஒழிப்பு, உள்நாட்டு உற்பத்திகளை மேம்படுத்தல் மற்றும் அந்நிய செலாவணி அதிகரிப்பு போன்றவற்றுக்கான அரச உத்தியோகத்தர்களின் பங்களிப்பு மற்றும் அர்ப்பணிப்பு தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
இதன் போது கடந்த வருடம் தங்களது கடமைகளுக்கு அப்பால் சேவையாற்றிய உத்தியோகத்தர்கள் மற்றும் தங்கள் கடமை செயற்பாடுகளில் சிறப்பாக செயற்பட்ட உத்தியோகத்தர்கள் கெளரவிக்கப்பட்டதுடன், நிர்வாக உத்தியோகத்தரின் நன்றியுரையுடன் நிகழ்வானது நிறைவுபெற்றது.



Comments