கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் (2023/2024) தோற்றும் மாணவர்களுக்கான தகவல்............
கல்வி அமைச்சின், திறன்கள் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கப் பிரிவின் ஏற்பாட்டில், இவ்வருடம் உயர்தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலம் வரை சுமார் மூன்று மாதகாலம் கல்விச் சூழலில் வைத்திருப்பதற்கான திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கிணங்க பரீட்சை முடிந்த கையோடு ஆங்கிலம் கற்க அங்கும் இங்கும் ஆங்கிலப் பயிற்சி வகுப்புகளுக்காக தேடி அலையாது, ஆங்கிலம், கணணி கற்கைநெறி மற்றும் தொழில் வழிகாட்டல் ஆலோசனையுடன் கூடிய கற்றல் செயற்பாடுகளை முற்றிலும் இலவசமாக வழங்கப்படவுள்ளன.
இதற்காக தமது பிரதேசத்தில், உங்களுக்கு அருகில் உள்ள பாடசாலையில் கற்கும் வாய்ப்புடன் பெற்றோர்கள், ஆசிரியர்கள் உங்கள் பிள்ளைகளை பயனடைய செய்யலாம்.
அதற்காக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அல்லது தரப்பட்டுள்ள QR code இனை Scan செய்வதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Online Application (QR Code Link / Google Form) – Click_Here
இத்திட்டத்திற்கான விண்ணப்பங்களை 2024.01.20 திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்து, பதிவுகளை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.
மேலதிக தகவல்களுக்கு தமது பகுதி பிரதேச செயலக, திறன்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் அல்லது வலயக் கல்வி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என கல்வி அமைச்சின் திறன்கள் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கப் பிரிவு அறிவித்துள்ளது.
Comments
Post a Comment