மட்டக்களப்பில் 169.4 மில்லி மீற்றர் மழை விழ்ச்சி பதிவாகியுள்ளது..............

 மட்டக்களப்பில் 169.4 மில்லி மீற்றர் மழை விழ்ச்சி பதிவாகியுள்ளது..............

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (02) அதிகாலையுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழை வீழ்ச்சியாக 169.4 மில்லி மீற்றர் மழை விழ்ச்சி மட்டக்களப்பில் பதிவாகியுள்ளது.
இதே வேளை மழைவீழ்ச்சியை அளவிடும் பிரதேசங்களான மயிலம்பாவெளி பகுதியில் 112.0 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், பாசிக்குடா பகுதியில் 32.5 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், உன்னிச்சைப் பகுதியில் 78.0 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், உறுகாமம் பகுதியில் 79.5 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், வாகனேரிப் பகுதியில் 33.2 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், கட்டுமுறிவுப் பகுதியில் 23.0 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளன.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் தாழ்வான பிரதேசங்களில் தேங்கியுள்ள மழைநீர் வழிந்தோட முடியாமையினால் பாதைகளில் நீர் தேங்கியுள்ளதுடன் வீடுகளுக்குள்ளும் வெள்ளநீர் உட்புகுந்துள்ளது. அதனால் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் அவர்களின் அன்றாட நிலைமைகள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நவகிரி மற்றும் தும்பங்கேணி பகுதிகளில் எந்த வித மழைவீழ்ச்சியும் பதிவாகவில்லை என மட்டக்களப்பு வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி ரமேஸ் சுப்பிரமணியம் மாவட்ட ஊடகப்பிரிவிற்கு தகவல் தெரிவித்தார்.

Comments