ஏறாவூர்ப்பற்று-01 கல்விக் கோட்டத்தில், தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு வண்டிகள் வழங்கப்பட்டன.

 ஏறாவூர்ப்பற்று-01 கல்விக் கோட்டத்தில், தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு வண்டிகள் வழங்கப்பட்டன...........

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று-01 கல்விக் கோட்டத்தில், தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுபுள்ளிக்கு மேல் புள்ளிகளை பெற்ற மாணவர்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன.

அகிம்சா சமூக நிறுவனத்தின் ஏற்பாட்டில் கனடா ஐயப்பன் இல்ல நிதி உதவியில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு மயிலம்பாவெளி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இடம்பெற்றது, மயிலம்பாவெளி விக்னேஸ்வரா வித்தியாலய அதிபர் பாஸ்கரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், அதிதிகளாக கனடா ஐயப்பன் இல்ல ஸ்தாபகர் சந்திர மோகன், ஆரம்ப கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் உமாபதி விவேகானந்தம், ஏறாவூர் பற்று 01 கோட்டக் கல்விப் பணிப்பாளர் ராஜ் மோகன், அகிம்சா சமூக நிறுவன தலைவர் விஜயராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.


Comments