புனித மிக்கல் கல்லூரி விளையாட்டை ஊக்குவிக்கும் UK OBA........
2024 ஆம் ஆண்டில் இருந்து மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியின் விளையாட்டுத் துறையினையும், ஏனைய இணைப் பாடவிதான செயற்பாடுகளையும் மேலும் விருத்தி செய்யும் நோக்கில் ஒவ்வொரு விளையாட்டுகளையும் வளப்படுத்தும் நோக்கில், மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியின் பழைய மாணவர்கள் ஒன்றியங்கள் அனுசரணை செய்ய முன்வந்துள்ளனர்.
அந்த வகையில் புனித மிக்கல் கல்லூரியின் கிரிக்கெட் விளையாட்டினை மேம்படுத்துவதற்காக மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரியில் கல்விகற்று தற்போது இங்கிலாந்தில் வசிக்கும் பழைய மாணவர் சங்கம் முதற் கட்டமாக எட்டு லட்சம் ரூபாய் பெறுமதியான கிரிக்கெட் உபகரணங்களை கல்லூரியின் அதிபரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இனி வரும் காலங்களில் 2024ல் பல்வேறுபட்ட விளையாட்டுக்களை மேம்படுத்துவதற்கான உதவிகளை வழங்கவுள்ளதாக பழைய மாணவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
Comments
Post a Comment