மட்டு இந்துக்கல்லூரி புதிய OBA பல திட்டங்கள்: முதல் திட்டத்தை வெற்றிகரமாக செய்த 2008 மாணவர்கள்......
மட்டு இந்துக்கல்லூரி புதிய OBA பல திட்டங்கள்: முதல் திட்டத்தை வெற்றிகரமாக செய்த 2008 மாணவர்கள்......
மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் புதிதாக நிர்வாக சபையை பொறுப்பேற்றுள்ள பழைய மாணவர் சங்க நிர்வாக சபை அன்மையில் பாடசாலை அதிபர் திரு.பகீரதன் அவர்களை சந்தித்து பாடசாலைக்கு தற்போது மிகவும் முக்கியமான தேவைகளை பரிசீலனை செய்திருந்தது. இதன் அடிப்படையில் மிக முக்கியமாக மாணவர்களுக்கான குடி தண்ணீருக்கான பிரச்சனை கலந்துரையாடப்பட்டன இதனை உடனடியாக தீர்த்துத்தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதன் நிமித்தம் இப்பணியை தாம் முன்னெடுத்து செய்து முடிப்பதாக 2008ம் ஆண்டு உயர்கல்வியில் இந்துக்கல்லூரியில் கல்வி கற்ற மாணவர்கள் வாக்குறுதி அளித்திருந்தனர். இப்பணியை அவர்கள் பொறுப்பேற்று அதனை விரைவாகவும், சிறப்பாகவும் செய்து முடித்துள்ளனர் இது பாராட்டத்தக்க விடயமாகும்.
இது போன்று இன்னும் பல வேலைத்திட்டங்களை தாம் முன்னெடுக்க திட்டுமிட்டுள்ளதாக இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் இரா.சிவநாதன் தெரிவித்துள்ளார். உண்மையில் இது பாராட்ட வேண்டிய வியடம். இப்பணியை செய்யுமாறு கொண்டதற்கினங்க செய்து முடித்த 2008ம் ஆண்டு இந்துக்கல்லூரியில் கல்வி கற்ற மாணவர் குழாத்திற்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பழைய மாணவர் சங்கம் சார்பாகவும் பாடசாலை சமூகம் தெரிவிப்பதாகவும் செயலாளர் தெரிவித்தார்.
Comments
Post a Comment