ஏசியன் டியு போல் சம்பியன்ஷிப்: மட்டக்களப்பு எம்பியர் கழகம் சாதனை........

 ஏசியன் டியு போல் சம்பியன்ஷிப்: மட்டக்களப்பு எம்பியர் கழகம் சாதனை........

ஏசியன் DU போல் சம்பியன் சிப் போட்டியில், மட்டக்களப்பு எம்பியர் விளையாட்டுக் கழக அணி, மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.

14 நாடுகள் பங்குபற்றிய DU போல் சம்பியன் சிப் போட்டி இந்தியாவின் மும்பை நகரில் இடம்பெற்றது. சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்திய எம்பியர் விளையாட்டுக் கழக அணி, 3வது இடத்தைப் பெற்றுச் சாதனை படைத்தது.

சாதனை படைத்த எம்பியர் விளையாட்டுக் கழக அணியினர், இராஜாங்க அமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






Comments