மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிமனையின் ஏற்பாட்டில், விசேட தேவையுடையோர் தினம்...........
மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில், விசேட தேவையுடையோர் தின நிகழ்வு, வவுணதீவு பரமேஸ்வரா வித்தியாலயத்தில் அமைந்துள்ள விஷேட கல்விப் பாடசாலையில் இன்று (13) இடம் பெற்றது.
இங்கு கல்வி பயிலும் மாணவர்களுக்கு பகல் உணவு வழங்கப்பட்டதோடு, விளையாட்டு நிகழ்வுகளும் நடாத்தப்பட்டன.
நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார், உளநல வைத்தியர் அருள்ஜோதி, விஷேட கல்வி ஆசிரிய ஆலோசகர் ஜெயகரன், உளநல சேவைகள் தொழில் வழிகாட்டல் ஆலோசகர் சிறிதரன், அதிபர் கதிர்காமத்தம்பி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மண்முனை மேற்கு கோட்டத்திலுள்ள விஷேட தேவையுடைய மாணவர்களுக்கு உளநல வைத்தியர் அருள்ஜோதி தலைமையில் வைத்திய முகாமும் ஆலோசனை வழிகாட்டல் நிகழ்வும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது
Comments
Post a Comment